Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கவேண்டும்: பஷீர்

In இலங்கை
Updated: 05:27 GMT, May 5, 2017 | Published: 05:27 GMT, May 5, 2017 |
0 Comments
1139
This post was written by : Ravivarman

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்க வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடை சட்டத்திலும் பார்க்க, புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அபாயகரமானது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் இது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தமது நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை. மேற்படி பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் நிறைவேற்றப்படுமாயின், அது முஸ்லிம்களையே அதிகமாக பாதிக்கும் என்பதால், அந்த சட்ட மூலம் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் என்ன அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறது என்பதை, அக்கட்சி  உடனே வெளிப்படுத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg