Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்: இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான்

In கிாிக்கட்
Updated: 06:31 GMT, May 5, 2017 | Published: 06:31 GMT, May 5, 2017 |
0 Comments
1569
This post was written by : Anojkiyan

இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய கிரிக்கெட் சபைகளுக்கு இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானதன் படி இதுவரை எந்த முடிவையும் இந்தியக் கிரிக்கெட் சபை அறிவிக்காததால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

இருநாடுகளுக்குமிடையில் கடந்த 2014ஆம் ஆண்டு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, 2015 முதல் 2023 வரை இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 6 தொடர்கள் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுடன் விடையாட இந்தியா தொடர்ந்து மறுத்துவருகின்றது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.

இதற்காக இந்தியாவிடம் இருந்து பல வழிகளில் நஷ்டஈடு வாங்க முயற்சி செய்தது. ஆனால் இந்தியா அதற்கு அடிப்பணியாத நிலையில் தற்போது இறுதி முடிவாக இந்தியாவிற்கு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கான நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இவ்விடயம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”லண்டனில் உள்ள புகழ்வாய்ந்த சட்ட நிறுவனத்துடன் எங்களுடைய சட்ட ஆலோசர்கள் ஆலோசனை செய்து, நஷ்டஈடு பெறுவதற்காக இந்த நோட்டீசை நாங்கள் இந்திய கிரிக்கெட் சபைக்கு அனுப்பியுள்ளோம்.

அந்த நோட்டீசில் இந்திய கிரிக்கெட் சபை புரிந்துணர்வு ஓப்பந்தத்தின்படி நடக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. 2015ஆம் இருந்து மூன்று தொடர்கள் நடைபெறவில்லை. அதில் இரண்டு பாகிஸ்தான் நடத்த வேண்டியதாகும். நாங்கள் பொதுவான இடத்தில் நடத்த முயற்சி செய்த போதிலும், இந்தியா திட்டவட்டமாக எங்களுக்கு எதிராக விளையாட மறுத்தது.

இந்திய கிரிக்கெட் சபையிடம் இருந்து வரும் பதிலை பொறுத்து நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்வோம். அல்லது ஐ.சி.சி.யிடம் வலியுறுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg