Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டும்: முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்

In கிாிக்கட்
Published: 06:58 GMT, May 5, 2017 |
0 Comments
1413
This post was written by : Anojkiyan
win

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்தியக் கிரிக்கெட் அணி கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் சஞ்செய் மஞ்ரேக்கர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் சபை இலாபம் பங்கீடு விகிதத்தில் மாற்றம் கொண்டு வந்ததால் கடும் நஷ்டமடைந்த இந்தியா, ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண தொடரை புறக்கணிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பின்னணியில் கட்டாயம் இந்தியக் கிரிக்கெட் அணி இத்தொடரில் கலந்துக்கொள்ள வேண்டுமென தமது விருப்பங்களை முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, சஹீர்; கான், குண்டப்பா விஸ்வநாத், சந்தீப் பட்டீல், ஆகாஷ் சோப்ரா, அஜித் அகர்கர், வெங்கடேஷ் பிரசாத், சபா கரிம், முரளி கார்த்திக், தீப் தாஸ் குப்தா ஆகியயோரும் இந்த தொடரில் இந்தியா பங்கேற்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இத்தொடருக்கான அணியை அறிவிப்பதற்கான ஐ.சி.சி.யின் காலக்கெடு முடிவடைந்து விட்டநிலையில், நாளை மறு நாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்குமா இல்லையா என்ற முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg