Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அறவிட முடியாக் கடன்களை வசூலிக்கும் அவசர சட்டத்திற்கு பிரணாப் முகர்ஜி ஒப்புதல்

In இந்தியா
Updated: 07:27 GMT, May 5, 2017 | Published: 07:15 GMT, May 5, 2017 |
0 Comments
1204
This post was written by : Shailu

அறவிட முடியாக் கடன்களை வசூலிக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று (வெள்ளிக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு வங்கிகளின் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வழிவகை செய்யப்பட்டுள்ளதோடு, வங்கிகளில் அறிவிட முடியாக் கடன்களை வசூலிக்க புதிய நடைமுறைகளும் கொண்டு வரப்படவுள்ளன.

நாட்டில் சுமார் ரூ.10 இலட்சம் கோடி அறவிட முடியாக் கடன்கள் உள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், இந்த அவசரச் சட்டத்தின் மூலம் வங்கிகளின் கடன்கள் விரைந்து வசூலிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அறவிடமுடியாக் கடன்கள் தொடர்பான அவசர சட்டத்திற்கு நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து குறித்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மேற்படி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg