Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பசில் உள்ளிட்ட நால்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

In இலங்கை
Updated: 07:26 GMT, May 5, 2017 | Published: 07:26 GMT, May 5, 2017 |
0 Comments
1166
This post was written by : Risha

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் 08ஆம் திகதி குறித்த நால்வரும் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2 ஆயிரத்து 991 மில்லியன் ரூபா பணத்தை தவறாக பயன்படுத்தியதாக குறித்த நால்வர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg