Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெய்னில் இரசாயன ஆலையில் வெடிப்பு: 37 பேர் காயம்

In ஐரோப்பா
Updated: 09:45 GMT, May 5, 2017 | Published: 09:44 GMT, May 5, 2017 |
0 Comments
1230
This post was written by : Elakkiya

ஸ்பெய்ன் தலைநகர் மட்ரிட் அருகில் அமைந்துள்ள இராசாயன கழிவுகள் மீள்சுழற்சித் தளத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 37 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) மேற்படி வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன்போது, காயமடைந்தவர்களில் மூவர் உயிராபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் 11 தீயணைப்புப் படைப் பிரிவினர் தொடர்ந்தும் பணியில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்பு சம்பவம் காரணமாக பெருமளவான கரும்புகை வெளியேறுகின்ற நிலையில், 500 மீற்றர் தொலைவுவரை உள்ள பாடசாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் யாவும் மூடப்பட்டுள்ளதாக மட்ரிட் பிராந்திர அரசு தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg