Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவ வசதிகளை பார்வையிட்டார் வடகொரிய தலைவர்

In உலகம்
Updated: 10:06 GMT, May 5, 2017 | Published: 10:06 GMT, May 5, 2017 |
0 Comments
2393
This post was written by : Elakkiya

வடகொரியாவின் தென்மேற்கு தீவுப் பகுதிகளான ஜங்ஜே (Jangjae) மற்றும் மு (MU)ஆகிய இடங்களுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜொங்-உன் விஜயம் மேற்கொண்டுள்ளதாக அரச ஊடகம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இடங்களில் இராணுவ தளங்கள் மற்றும் வசதிகளை பார்வையிட்ட கிம், போர் நடவடிக்கைகளுக்கு வடகொரிய துருப்புக்கள் தயார் என தெரிவித்ததாகவும் குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கிம் ஜொங்-உன் குறித்த பிரதேசங்களுக்கு எப்போது விஜயம் மேற்கொண்டார் என்பது குறித்து அரச ஊடகம் தகவல் வெளியிடவில்லை. எனினும் தென்கொரிய எல்லைப்பகுதியிலிருந்து 12 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள குறித்த இரண்டு சிறுதீவுகளுக்கும் நேற்று (வியாழக்கிழமை) கிம் விஜயம் மேற்கொண்டிருந்ததாக தென்கொரிய இராணுவ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரிய தீபகற்பத்தில் அதிகரித்துவரும் பதற்றங்களுக்கு மத்தியில் வடகொரிய தலைவரின் இந்த விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg