Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘விவேகம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டது

In சினிமா
Updated: 15:41 GMT, May 6, 2017 | Published: 12:03 GMT, May 6, 2017 |
0 Comments
1253
This post was written by : Surenth

அஜித்தின் நடிப்பில் உருவாகிவரும் ‘விவேகம்’ திரைப்படத்தின் டீசர் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்படுள்ளது. குறித்த அறிவிப்பை இயக்குனர் சிவா நேற்று (வியாழக்கிழமை) இரவு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அஜித் இரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு செய்தியாக எதிர்வரும் 18ஆம் திகதி 12.01 மணிக்கு ‘விவேகம்’ திரைப்பட டீசர் வெளியிடப்படும் எனவும் அவர் குறித்த பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அஜித்தின் பிறந்த நாளான கடந்த 1ஆம் திகதியன்று ‘விவேகம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், அன்றைய தினம் டீசர் வெளியிடப்படவில்லை.

பல்கேரியாவில் தொடர் படப்பிடிப்பு நடைபெறுவதால்தான் டீசர் அன்ரைய தினம் வெளியிடப்படவில்லை தகவல்கள் வெளியாகியிருந்தன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg