Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுற்றுலா துறையின் அபிவிருத்தி தேவேந்திரமுனையிலிருந்து ஆரம்பம்

In இலங்கை
Updated: 11:33 GMT, May 5, 2017 | Published: 11:22 GMT, May 5, 2017 |
0 Comments
1231
This post was written by : Vithushagan

துறைமுக அதிகார சபையின் ஒத்துழைப்புடன் நாட்டின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை தேவேந்திரமுனையிலிருந்து ஆரம்பிக்க முடிந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

தேவேந்திரமுனை வெளிச்சவீட்டை மீண்டுமொருமுறை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று(வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,  ’சுற்றுலா துறையை முன்னேற்றுவதற்காக துறைமுக அதிகாரசபை தேவெந்திர முனையிலிருந்து தனது பணியை ஆரம்பித்துள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்

நாட்டின் வளங்களை நாட்டிற்கு நன்மைபயக்கும் வகையில் உபயோகப்படுத்துவது மக்களின் கடமையாகும். பல மாதங்களிற்கு முன்னர் தேவெந்திரமுனை வெளிச்ச வீட்டிற்கு மக்கள் செல்வது நிறுத்தப்பட்டது. தற்போது நிலமை வழமைக்கு திரும்பியுள்ளது.

இவ்வெளிச்ச வீடுகள் மூலமாக சுற்றுலா துறைக்கு பல நன்மைகள் கிடைக்கும். நாடு முழுவதிலுமுள்ள அனைத்து வெளிச்ச வீடுகள் பொருட்டு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது’ அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

unnamed (17)

unnamed (17)unnamed (18)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg