Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லிபிய கடற்பிராந்தியத்தில் 560 குடியேற்றவாசிகள் பாதுகாப்பாக மீட்பு

In ஐரோப்பா
Updated: 10:53 GMT, May 5, 2017 | Published: 10:53 GMT, May 5, 2017 |
0 Comments
1359
This post was written by : Elakkiya

கடத்தல்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் இளைஞர் ஒருவரின் சடலத்துடன் லிபிய கடற்பிராந்தியத்தில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் மேற்கொண்ட 560 குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டுள்ளதாக கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

இத்தாலிய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரின் படகுகள் மற்றும் இரண்டு கப்பல்களின் உதவியுடன் நேற்று (வியாழக்கிழமை) இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு ஆபிரிக்காவில் இருந்து இத்தாலிக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை இவ்வருட ஆரம்பத்திலிருந்து 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

இது இவ்வாறிருக்க, கடந்த வருடம் இத்தாலியை சென்றடைந்த குடியேற்றவாசிகளின் மொத்த எண்ணிக்கை 181,000 என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg