Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

முஸ்லிம்களின் வாக்குகளைக் கொள்ளையடித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது: நாமல்

In இலங்கை
Published: 11:50 GMT, May 5, 2017 |
0 Comments
1425
This post was written by : Ravivarman
namal

தவநாதன் இரவிவர்மன்

முஸ்லிம்களின் வாக்குளை கொள்ளையடித்து ஆட்சிக்கு வந்த நல்லாட்சி இன்று அவர்களின் வயிற்றில் அடிக்க ஆரம்பித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மே தின கூட்டத்தில் கலந்துகொண்ட களுத்துறை மாவட்ட முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இன்று (வெள்ளிக்கிழமை) களுத்துறையில் இடம்பெற்ற மக்கள்  சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“என்றும் இல்லாதவாறு இம்முறை ஹஜ்ஜுக்கு செல்பவர்களிடம் 25000 பதிவுக்கட்டணம் அறவிடப்படுகிறது. இனவாதிகள் எவற்றையெல்லாம் செய்ய வேண்டுமெனப் பல வருடங்களாக கூவித் திரிந்தார்களோ அவைகள் அத்தனையையும் இன்று நன்கு திட்டமிட்டு அரச அங்கீகாரத்துடன் செயற்படுத்துகின்றனர்.

முஸ்லிம்கள் நோன்பு காலங்களில் பேரீச்சம்பழம் முக்கியமான ஓர் உணவுப் பொருளாகும். இக்காலங்களில் பேரீச்சம்பழங்களைஅரசாங்கமானது மக்களுக்கு தேவையான அளவு குறைந்த விலையிலேயே வழங்கவேண்டும். ஆனால் இன்று அரசாங்கம் பேரீச்சம்பழத்திற்குக்கூட வரி விதித்திருக்கின்றது.

இந்த ஆட்சியில் சில இனவாத செயற்பாடுகள் தலைதூக்கிய போது மௌனமாக இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இப்போதும் மௌனமாக இருப்பது வேடிக்கையானது” என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.