Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொலைகாரா்களை பாதுகாக்கும் அரண்களாக தூதரகங்கள் பயன்படுத்தப்பட்டன: அமைச்சா் மங்கள

In இலங்கை
Published: 15:36 GMT, May 5, 2017 |
0 Comments
1369
This post was written by : srikkanth

மஹிந்தரின் ஆட்சியில் கொள்ளையர்களும் கொலைகாரர்களுமே வெளிநாட்டு தூதரங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டதாகவும் அவ்வாறானவர்களை பாதுக்காக்கும் அரண்களாக வெளிநாட்டு தூதரகங்களை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய பயன்படுத்தியதாகவும் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளையை அங்கீகரித்துக் கொள்வதற்கான பிரேரணையின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய மங்கள தெரிவிக்கையில்,

”கடந்த ஆட்சியின்போது மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டன. கடத்தல் – கொள்ளை – கொலைகளும் தலைவிரித்தாடின. இவற்றுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடந்த ஆட்சியில் வெளிநாட்டு தூதகரங்களில் வேலை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையிலுள்ள குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் இல்லமாகவே தூதரகங்கள் பயன்படுத்தப்பட்டன.

அதேவேளை, பிரேஸிலில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இடம்பெற்றுள்ள படுகொலையுடன் தொடர்புடைய இருவருக்கு பிரேஸிலில் இருந்து அமெரிக்காவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. லசந்தவின் படுகொலையுடன் தொடர்புபட்ட ஒருவர் பேர்லினிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றியுள்ளார்.

ரஷ்யாவின் தூதுவராக நியமிக்கப்பட்ட உதயங்க ஒன்பது வருடங்களாக அங்கு இருந்தார். அவரின் 14 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிக் கணக்குகளின் ஊடாக ஒரு பில்லியனுக்கும் அதிகமான பணம் கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்டுள்ளது. இவரை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸ் ஊடாக பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் எங்கு இருக்கிறார் என்று தெரியும். தொடர்ந்தும் அவரால் ஒளிந்திருக்க முடியாது” என்றும்  தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg