Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வறட்சியால் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

In இலங்கை
Updated: 04:24 GMT, May 6, 2017 | Published: 03:12 GMT, May 6, 2017 |
0 Comments
1349
This post was written by : Anojkiyan

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் சுமார் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக வறட்சியினால் கம்பஹா மாவட்ட மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. அந்தவகையில்  கம்பஹா மாவட்டத்தில் 66 ஆயிரத்து 921 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 90 ஆயிரத்து 342 பேர் பாரியளவிலான குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இதில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அம்பாறை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 75ஆயிரத்து 778 குடும்பங்களைச் சேர்ந்த 10 இலட்சத்து 11 ஆயிரத்து 406 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg