Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பண்டாரவளை குப்பைமேடும் சாியும் அபாயம்: மக்களை வெளியேறுமாறு உத்தரவு

In இலங்கை
Updated: 04:42 GMT, May 6, 2017 | Published: 04:19 GMT, May 6, 2017 |
0 Comments
1264
This post was written by : Anojkiyan

பதுளை- பண்டாரவளை கலமடுகஸ்தன்ன குப்பைமேடு சரிந்துவிழும் அபாயம் காணப்படுவதால், குறித்த பகுதியை அண்மித்து வாழும் குடும்பங்களை உடனடியாக அப்பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் உத்தரவிட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உத்தரவிற்கமைய குறித்த பகுதியில் வசிக்கும் 12 குடும்பங்களையும் உடனடியாக வெளியேறுமாறு பண்டாரவளை பிரதேச சபை வலியுறுத்தியுள்ளது. ஆனால், அங்கிருந்து வெளியேறுவதற்கு மறுப்பு தொிவித்த மக்கள், மாறாக குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பண்டாரவளை பிரதேச சபைக்கு உட்பட்ட பதினைந்து பிரதேசங்களின் குப்பைகள் நீண்ட காலமாக கலமடுகஸ்தன்ன குப்பை மேட்டில் கொட்டப்பட்டு வருகின்றன. குறித்த குப்பை மேட்டை சுற்றி முப்பது அடி உயரமான சீமெந்து சுவர் எழுப்பப்பட்டுள்ள போதிலும், தற்போது குப்பை மேட்டின் குப்பைகளின் கனம் அதிகரித்துள்ள நிலையில், குப்பை மேட்டை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுவரில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்தே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg