Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த சுற்றுக்குள் நுழையும் அணிகள் எவை? : ஐ.பி.எல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்

In கிாிக்கட்
Updated: 05:26 GMT, May 6, 2017 | Published: 05:24 GMT, May 6, 2017 |
0 Comments
5827
This post was written by : Elakkiya

நடப்பு ஐ.பி.எல் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

தொடரின் 44 ஆவது லீக் போட்டியாக ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் சன்றைஸஸ் ஹைதராபாத் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதவுள்ளன. இந்தபோட்டி இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் இதுவரை சொந்த ஊரில் தோல்வியை சந்திக்காத அணி என்ற பெருமையுடன் விளையாடும் ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் வெற்றி, 4 போட்டிகளில் தோல்வி, ஒரு போட்டி முடிவில்லை என 11 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகளை பெற்றுள்ளது.

புனே அணியுடனான இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் பிளே-ஓப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து கொள்ள முடியும் என்ற நிலையில் ஹைதராபாத் அணி உள்ளது.

அதேபோன்று 11 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன்  உள்ள புனே அணிக்கும் இன்றைய போட்டி முக்கியம் வாய்ந்த போட்டியாக உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் பிளே-ஓப் சுற்றுக்குள் நுழைந்து விட முடியும்.

அந்த வகையில் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் சவால்நிறைந்த போட்டியாகவே அமையவுள்ளது.

அதேபோன்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறவுள்ள தொடரின் 45 ஆவது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இரவு 8 அணிக்கு ஆரம்மாகவுள்ளது.

பிளே-ஓப் சுற்று வாய்ப்பினை மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே உறுதிசெய்துவிட்டது. இனிவரும் நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மாத்திரமே பிளே-ஓப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நிலையில் டெல்லி அணி உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg