Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெடித்துச் சிதறியது ஃபுவேகோ எரிமலை: 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றம்

In உலகம்
Updated: 05:54 GMT, May 6, 2017 | Published: 05:54 GMT, May 6, 2017 |
0 Comments
1566
This post was written by : Sylviya

மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலாவின் ஃபுவேகோ (Fuego) எரிமலை வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து குறித்த பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு நோக்கம் கருதி வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குறித்த அனர்த்தத்தை அடுத்து உள்ளூர் பாடசாலைகள் பல மூடப்பட்டுள்ளன.

ஃபுவேகோ எரிமலை வெடிப்பின் காரணமாக கடல் மட்டத்திலிருந்து சுமார் 34 ஆயிரம்  தொடக்கம் 37 ஆயிரம் அடி வரை சாம்பல் நிறைந்துள்ளதாக எரிமலை தொடர்பில் கண்காணிக்கும் குவாத்தமாலா அமைப்பொன்று தொிவித்துள்ளது.

குவாத்தமாலாவில் மொத்தம் 37 எரிமலைகள் உள்ளதாகவும் அதில் இந்த ஃபுவேகோ எரிமலையே அதிகளவில் வெடித்துச் சிதறுவதாகவும், அந்தவகையில்  ஃபுவேகோ எரிமலையானது இவ்வருடத்தில் மாத்திரம்  நான்கு முறை வெடித்துச் சிதறியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg