Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவில் விமானத் தாக்குதல்கள்: கட்டிடங்கள் பல முற்றாக சேதம்

In உலகம்
Published: 06:27 GMT, May 6, 2017 |
0 Comments
1621
This post was written by : Sylviya

சிரியத் தலைநகர் டமஸ்கஸ் மற்றும் ஹமா மாகாணத்தில் உள்ள லட்டாம்னே (Latamneh)) ஆகிய பகுதிகளில் விமான தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள்வது தொடர்பான காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட குறித்த காணொளியில், கரும்புகை வானை நோக்கி கிளம்புவதும் கட்டிடங்கள் பல முற்றாக சேதமுற்றிருப்பதும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், சிரிய மனித உரிமைகள் தொடர்பில் கண்காணிக்கும் அமைப்பு இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது, கிழக்கு டமஸ்கஸ் பகுதியில் அமைந்துள்ள குவாபொன் (Qaboun) மற்றும் டிஷ்ரீன் (Tishreen) ஆகிய பகுதிகளில் சில இராணுவ போர் விமானங்கள் விமானத் தாக்குதல்கள் மேற்கொண்டன என தெரிவித்துள்ளது.

அத்தோடு சிரிய ஜனாதிபதி பஷர் அல் – அஸாட்டின் ஆதரவு பெற்ற சிரிய துருப்புக்கள் குறித்த பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தின எனவும் குறித்த குழு தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த தாக்குதல்களில் காயமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோர் தொடர்பில் இதுவரை எதுவித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg