Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆங் சான் சூகிக்கு மதிய உணவு விருந்துபசாரம் செய்தார் பிரித்தானிய மகாராணி

In
Updated: 07:09 GMT, May 6, 2017 | Published: 07:09 GMT, May 6, 2017 |
0 Comments
1530
This post was written by : Sylviya

மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) பிரித்தானிய மகாராணி எலிசபெத்துடன் மதிய உணவு விருந்துபசாரத்தில் கலந்துகொண்டுள்ளார்.

குறித்த மதிய உணவு விருந்துபசாரம் நேற்று (வெள்ளிக்கிழமை) எலிசபெத் மகாராணியின் பக்கிங்ஹாம் மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இந்த விருந்துபசாரத்தின் பின்னர் அவர் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது துணைவி கமீலா ஆகியோரையும் சந்தித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விருந்துபசார நிகழ்வு தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகம் ஒன்று, இளவரசர் வில்லியமும் இந்த விருந்துபசாரத்தில் இணைந்து கொண்டதாக தெரிவித்துள்ளது.

நோபல் பரிசை வென்ற ஆங் சான் சூகி தற்போது மியன்மாரின் வெளியுறவு அமைச்சராக செயலாற்றி வரும் நிலையில், ரோஹின்யா இன முஸ்லிம் மக்களுக்கு மியன்மாரில் கொடுமை இழைக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்தை முற்றாக மறுத்துள்ளார்.

மியன்மாரின் ரோஹின்யா மாநிலத்தில் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இடம்பெறும் தொடர்ச்சியான வன்முறை காரணமாக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தற்போது பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg