Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய ஒலிம்பிக் சபையின் தலைவராக ஜோன் கோட்ஸ் தேர்வாகியுள்ளார்

In விளையாட்டு
Updated: 08:05 GMT, May 6, 2017 | Published: 08:05 GMT, May 6, 2017 |
0 Comments
1196
This post was written by : Elakkiya

அவுஸ்ரேலிய ஒலிம்பிக் சபையின் தலைவராக ஜோன் கோட்ஸ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிட்னியில் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எதிர்த்து போட்டியிட்ட டானி ரோச்சை 23 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அவுஸ்ரேலிய ஒலிம்பிக் சபையின் தலைவராக ஜோன் கோட்ஸ் தேர்வாகியுள்ளார்.

விளையாட்டு உலகில் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக திகழும் ஜோன் கோட்ஸ் அவுஸ்ரேலிய ஒலிம்பிக் சபை தலைவருக்கான வாக்கெடுப்பில் தோல்யியடைந்திருப்பின் சர்வதேச ஒலிம்பிக் சபையின் துணைத் தலைவர் பதவி மற்றும் டோக்கியோவில் நடைபெறவுள்ள 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடருக்கான ஒருங்கிணைப்பு ஆணையகத்தின் தலைவர் பதவிகளை இழக்க நேரிட்டிருக்கும்.

எவ்வாறெனினும் தீவிர பிரசாரங்களுக்கு பின்னர் 93 வாக்குகளிலிருந்து 58 வாக்குகளை பெற்று ஜோன் கோட்ஸ் வெற்றிபெற்றுள்ளார்.

அவருக்கு எதிராகவும் டானி ரோச்சிற்கு ஆதரவாகவும் 35 வாக்குகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg