Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதுகாப்பு வலயங்களை சிரியாவில் உருவாக்கும் திட்டம் இன்று முதல் அமுலில்

In ஐரோப்பா
Published: 08:50 GMT, May 6, 2017 |
0 Comments
1435
This post was written by : Sylviya

சிரியாவில் பாதுகாப்பான வலயங்களை உருவாக்குவது குறித்த திட்டம் இன்று (சனிக்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளது என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதகாப்பு வலயம் குறித்து நேற்று முன்தினம்  கஸகஸ்தானில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளது.

இருப்பினும், பாதுகாப்பு வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது விமான தாக்குதல்கள் தொடர்ந்தும் நடத்தப்படும் என ரஷ்ய விமானப் படை தெரிவித்துள்ளது.

சிரியாவில் உள்ள இட்லிப் மாகாணம் மற்றும் மாவட்டங்களான லட்டாக்கியா, அலெப்போ மற்றும் ஹமா ஆகியவை பாதுகாப்பான வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் கஸகஸ்தானில் நடத்தப்பட்ட  பேச்சுவார்த்தைகளின் போது, சிரிய ஜனாதிபதி பஷர் – அல் – அஸாட்டிற்கு ஆதரவு தரிவித்து வரும் ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் பங்கேற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg