Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குடியேற்றவாசிகளை சட்டவிரோதமாக விவசாயத்தில் ஈடுபடுத்த முயன்ற ஆறு பேர் கைது

In ஐரோப்பா
Updated: 09:59 GMT, May 6, 2017 | Published: 09:59 GMT, May 6, 2017 |
0 Comments
1341
This post was written by : Sylviya

தெற்கு இத்தாலியில், குடியேற்றவாசிகள் சிலரை சட்டவிரோதமாக விவசாயத்தில் ஈடுபடுத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக விவசாயம் செய்ய அழைத்துச் செல்லப்பட்ட குடியேற்றவாசிகள் அனைவரும் குடியேற்றவாசிகள் மையத்தில் இருந்த போதே அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கைக்கு குடியேற்றவாசிகள் தங்கியிருந்த மையத்திலிருந்த முகாமையாளர் மற்றும் மேலும் இரு ஊழியர்கள் உடந்தையாக இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

செனகல், நைஜீரியா மற்றும் சோமாலியாவிலிருந்து வந்த குடியேற்றவாசிகளே சட்டவிரோத விவசாயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் எனவும் அவர்களுக்கு 15 தொடக்கம் 20 யூரோக்கள் வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg