Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல்பந்திலும் சிக்ஸர் அடிக்க தயங்கமாட்டேன்: ரிஷப்பான்ட்

In கிாிக்கட்
Updated: 10:21 GMT, May 6, 2017 | Published: 10:20 GMT, May 6, 2017 |
0 Comments
1791
This post was written by : Elakkiya

எதிர்கொள்ளும் முதல்பந்து அடிக்கக் கூடியதாக இருக்குமாயின் நிச்சயம் சிக்ஸர் அடிப்பேன் என்று நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடும் ரிஷப்பான்ட் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற குஜராத் லயன்ஸ் அணியுடனான போட்டியில் டெல்லி அணியில் களமிறங்கிய ரிஷப்பான்ட் 43 பந்துகளை எதிர்கொண்டு 97 ஓட்டங்களை குவித்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச் சென்றார்.

இதன்போது செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ரிஷப்பான்ட், ‘நான் சந்திக்கும் முதல்பந்து அடிக்கக் கூடியதாக அமைந்தால் நிச்சயம் சிக்ஸராக அடிப்பேன். பந்து வீச்சாளர்கள் மோசமான பந்தை வீசும் போது அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் எதை பற்றியும் சிந்திக்காமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் டிராவிட் கூறியதே இந்த அதிரடிக்கு காரணம்’ என்று கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg