Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவில் கனமழை: வெள்ளம் காரணமாக மக்கள் வெளியேற்றம்

In கனடா
Updated: 11:09 GMT, May 6, 2017 | Published: 10:56 GMT, May 6, 2017 |
0 Comments
1434
This post was written by : Elakkiya

கனடாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். அத்துடன் குறித்த பகுதிகளில் இராணுவ உதவியும் கோரப்பட்டுள்ளது.

மேலும், தரைப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விமானப் போக்குவரத்துக்களிலும் தாமதங்கள் ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கனேடிய சுற்றுச் சூழல் அமைப்பின் வானிலை முன்னறிப்பு தகவல்களின் பிரகாரம் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை வரையிலும் கிழக்கு ஒன்ராறியோ மற்றும் மேற்கு கியூபெக்கில் 60 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கேற்ப ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களிலும் இந்த வாரம் பாரிய மழைவீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

கியூபெக் நகராட்சியை சேர்ந்த சுமார் 124 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1326 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 700 வீடுகளைச் சேர்ந்த குடும்பங்களை வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg