Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பத்ரிநாத் ஆலயத்தில் குடியரசுத் தலைவர் வழிபாடு

In இந்தியா
Updated: 15:32 GMT, May 6, 2017 | Published: 11:26 GMT, May 6, 2017 |
0 Comments
1331
This post was written by : Surenth

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் ஆலயத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற முதல் நாள் வழிபாட்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார்.

குறித்த ஆலய இந்த ஆண்டின் சர்தாம் யாத்திரை இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து, காலை 8.25 மணிக்கு பத்ரிநாத் ஆலயத்திற்கு சென்ற பிரணாப் முகர்ஜி, பயபக்தியுடன் பத்ரிநாதரை வழிபாடு செய்தார்.

அவருடன், உத்தரகாண்ட் மாநில ஆளுநர் கிருஷ்ணகாந்த் பால், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் உள்ளிட்டோரும் குறித்த வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று டில்லியில் இருந்து உத்தரகாண்ட்  மாநிலத்திற்கு வருகை தந்த அவர் டேராடூன் நகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்றிரவு தங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg