Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

அம்பாறையில் ஆலயங்களை உடைத்து திருடிய பெண் கைது!

In
Updated: 15:37 GMT, May 6, 2017 | Published: 12:02 GMT, May 6, 2017 |
0 Comments
1360
This post was written by : Ravivarman
60140_1280x720

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஆலயங்களின் கதவுகளை உடைத்து நீண்ட நாட்களாக நகைகளை திருடிய  பெண் உள்ளிட்ட மூவர்,  கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு, விநாயகபுரம் பத்திர காளியம்மன் கோயிலின் மூலஸ்தானக் கதவு உடைக்கப்பட்டு, நகைகள் திருடப்பட்டிருந்தன. இச் சம்பவம் தொடர்பாக ஆலயத் தலைவர், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜயசேகரவின் பணிப்புரைக்கமைய பொத்துவில், திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் வலயத்துக்குப் பொறுப்பான அதிகாரி ஜீ.ஜீ.என்.ஜெயசிறிவின் ஆலோசனையுடன், திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.கே.பண்டாரவின் தலைமையில் பெரும் குற்றப்பிரிவு அதிகாரி மொஹமட் சதாத்தின் குழுவினர் மோப்ப நாய் மற்றும் தடய ஆய்வு பொலிஸாருடன் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தொலைபேசி தகவலினையடுத்து கோமாரி கிராமத்தை சேர்ந்தவரும் விநாயகபரம், கண்ணகிபுரம் கிராமங்களில் வசிப்பவருமான பிரதான சந்தேகநபர் பொலிஸாரினால் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை விநாயகபுரத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். இவரிடமிருந்து பெறப்பட்ட மேலதிக தகவல்களின் மூலம் ஏனைய இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.