Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணியை புகழ்ந்து பாராட்டிய சைட் அஃப்ரிடி

In கிாிக்கட்
Updated: 04:11 GMT, May 7, 2017 | Published: 04:09 GMT, May 7, 2017 |
0 Comments
1728
This post was written by : Surenth

இந்திய அணி சிறப்பாக விளையாடிவருவதாகவும் அவர்கள், துடுப்பாட்டத்திலும் பந்து வீச்சிலும் சிறந்த முறையில் பிரகாசித்து வருவதாகவும் பாகிஸ்தான் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரரும் பந்து வீச்சாளருமான சைட் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன. இது குறித்து நேற்று (சனிக்கிழமை) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த போட்டியின் போது இரு அணிகளுக்கும் இடையில் மோதல்கள் காணப்படும் என்றும் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த போட்டியை பார்ப்பதற்காக தான் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த தொடரில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்றும் பாகிஸ்தான் அணியின் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளமையால் அது இந்தியாவின் துடுப்பாட்ட வீரர்களுக்கும் சவாலாக இருக்கும் என்றும் சைட் அஃப்ரிடி நம்பிக்கை வெளியிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg