Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லி சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா பதவியிலிருந்து நீக்கம்!

In இந்தியா
Updated: 04:14 GMT, May 7, 2017 | Published: 04:11 GMT, May 7, 2017 |
0 Comments
1265
This post was written by : Ravivarman

டெல்லி சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை சரிவர தீர்க்க தவறியதற்காகவே கபில் மிஸ்ரா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்றையதினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது நிலவும் கடும் வரட்சி தொடர்பாக கபில் மிஸ்ரா எதுவித ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. அத்துடன் கட்சியின் பெயரிற்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் இவர் செயற்பட்டு வந்தார். மக்கள் இதனால் அதிருப்தியடைந்துள்ளனர். அவருக்கு பதிலாக ராஜேந்திரபால் கவுதம், கைலாஷ் கெலாட் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சிக்கு விரோதமாகச் செயற்படும் குமார் விஸ்வாஸ் போன்றோருடன் சேர்ந்து இவர்கள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர். இவரைப் போன்றே கட்சியிலிருக்கும் ஏனைய சிலர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன” என அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg