Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தன்சானியாவில் பாடசாலை பேரூந்து விபத்து: 33 மாணவர்கள் உட்பட 36பேர் உயிரிழப்பு

In
Updated: 04:10 GMT, May 7, 2017 | Published: 04:10 GMT, May 7, 2017 |
0 Comments
1693
This post was written by : Anojkiyan

கிழக்கு ஆபிரிக்க நாடான தன்சானியாவில் பாடசாலை பேரூந்து ஒன்று பள்ளத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில், 33 மாணவர்கள் உட்பட 36பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) அருஷா மாகாணத்திலுள்ள ஆரம்பபாடசாலை மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்காக சென்று கொண்டிருந்த வேளையிலேயே பேரூந்து மியாட்டு மாவட்டத்தில் உள்ள மிலேரா ஆற்றங்கரையோரம் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, 33 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பேரூந்து சாரதி என 36பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்த மாணவர்கள் 12-13 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தே விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவ் விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg