Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹைதராபாத் அணியை வீழ்த்தி புனே அணி வெற்றியை பதிவு செய்தது

In கிாிக்கட்
Updated: 05:23 GMT, May 7, 2017 | Published: 05:23 GMT, May 7, 2017 |
0 Comments
1677
This post was written by : Surenth

ஐ.பி.எல். தொடரின் 44ஆவது போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை தோற்கடித்து ரைஸிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணி வெற்றி கொண்டது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் உனட்கட் பெற்றுக்கொண்ட 5 விக்கெட்டுக்களின் அடிப்படையில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றியை பதிவு செய்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய புனே அணி தீர்மானிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 148 ஓட்டங்களை பெற்றது.

புனே அணி சார்பில், ஸ்டொக் 39 ஓட்டங்களையும், ஸ்மித் 34 ஓட்டங்களையும், தோனி 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். ஹைதராபாத் அணியின் பந்து வீச்சில் கவுல் 4 விக்கெட்டுக்களையும் ரிஷாட் கான், ஷர்மா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

149 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 136 ஓட்டங்களை பெற்று 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

புனே அணியின் பந்து வீச்சில், உனட்கட் 5 விக்கெட்டுக்களையும் ஸ்டொக் 3 விக்கெட்டுக்களையும் தாஹீர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியை தொடர்ந்து புனே அணி 8 வெற்றிகளுடன் பிளே ஒஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg