Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொடநாடு பங்களா கொலை வழக்கின் குற்றப்பத்திரிகை தயாரிப்புப் பணிகள் ஆரம்பம்!

In இந்தியா
Updated: 05:08 GMT, May 7, 2017 | Published: 05:07 GMT, May 7, 2017 |
0 Comments
1211
This post was written by : Ravivarman

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் இடம்பெற்றதாக கூறப்படும் கொலை-கொள்ளை வழக்கின் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொடநாடு பங்களாவில் நடந்த கொலை-கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்துள்ள பொலிஸார், இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர். குறித்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் சாரதி கனகராஜ் விபத்தில் பலியாகி இருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கில் முக்கிய ஆதாரமாக கொள்ளையர்கள் தப்பிச் சென்ற வாகனம் சேரிங்கிராஸ் வீதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளையும், மேலும் வேறு கமராக்களில் கிடைத்த காட்சிகள் மற்றும் இன்னும் பல ஆதாரங்களையும் இணைத்து குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கொடநாடு பங்களா ஊழியர் ஒருவரின் வாக்குமூலம் பெறப்பட்டதும் குற்றப் பத்திரிகை தயாரிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி விரைவில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg