Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: இரண்டாம் சுற்று வாக்குபதிவு தீவிரம்

In ஐரோப்பா
Updated: 06:21 GMT, May 7, 2017 | Published: 06:21 GMT, May 7, 2017 |
0 Comments
1447
This post was written by : Anojkiyan

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்குபதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

பெருநகர பிரான்ஸில் உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் வாக்குப்பதிவு, இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில பெரிய நகரங்களில் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு மையங்கள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட வாக்குப்பதிவுகளில் தீவிர வலதுசாரி வேட்பாளர் இமானுவல் மக்ரோனும் தேசிய முன்னணி வேட்பாளர் மரின் லி பென்னும் இறுதிகட்ட தேர்தலுக்கு தெரிவாகியுள்ள போதிலும் கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம் இமானுவல் மக்ரோன் முன்னிலையிலுள்ளார்.

கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில், போட்டியிட்ட 11 பேரில், 39 வயதான முன்னாள் முதலீட்டாளரான இமானுவேலும், தீவிர வலதுசாரி தேசியவாதியான 48 வயதான மரின் லி பென்னுமே முன்னணி பெற்றனர்.

இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவினாலும் வாக்கெடுப்பில் மக்ரோங்கே வெற்றி பெறுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg