Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெங்களூர் அணியை தோற்கடித்து கொல்கத்தா அணி பிளே ஒஃப் சுற்றுக்கு செல்லுமா ?

In கிாிக்கட்
Updated: 06:35 GMT, May 7, 2017 | Published: 06:35 GMT, May 7, 2017 |
0 Comments
2107
This post was written by : Surenth

ஐ.பி.எல். தொடரின் 46ஆவது போட்டி கௌவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையில் இடம்பெற உள்ளது.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள இந்த போட்டியில் பிளே ஒஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொல்கத்தா அணி புனே அணிக்கு எதிரான போட்டியில் பெற்றுக்கொண்ட தோல்வியின் காரணமாக எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மாத்திரமே பிளே ஒஃப் சுற்றுக்கு செல்ல முடியும்.

இந்த நிலையில், 11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடனும், 4 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது.

இதன்படி, கொல்கத்தா அணி சார்பில், கௌவுதம் காம்பீர், டிரென்ட் போல்ட், டேரன் பிராவோ, பியூஸ் சாவ்லா, நாதன் கௌல்டர் நைல், ரிஷி தவண், சயன் கோஷ், செஷல்டன் ஜேக்சன், இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், கிறிஸ் லைன், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரோவ்மான் பொவல், அங்கித் ராஜ்புத், சஞ்ஜெய் யாதவ், ஷாகிப் அல் ஹசன், ரொபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்ய குமார் யாதவ், உமேஷ் யாதவ் ஆகியோர் விளையாடுகின்றனர்.

பெங்களூர் அணியில், விராட் கோஹ்லி,டிவில்லியர்ஸ், ஷான் வாட்சன், கிறிஸ் கெய்ல், ஸ்ரீநாத் அர்விந்த், அவேஷ் கான், சாமுவேல் பத்ரி, ஸ்டூவர்ட் பின்னி, யுவேந்திரா சாஹல், அனிகெட் சவுத்ரி, பிரவீன் துபே, டிரெவிஸ் ஹெட், இக்பால் அப்துல்லா, கேதார் ஜாதவ், சர்ப்ராஸ் கான், மன்தீப் சிங், டைமல் மில்ஸ், அடம் மில்னே, பவன் நெகி, ஹர்ஷால் படேல், சச்சின் பேபி, தப்ராசி ஷம்சி, பில்லி ஸ்டான்லேக் ஆகியோர் களம் காணவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg