Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அத்துமீறிய மீன்பிடியை தடுப்பதற்கு நடுக்கடலில் எல்லைப்பலகை!

In இலங்கை
Published: 06:56 GMT, May 7, 2017 |
0 Comments
1712
This post was written by : Varshini
sea

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்கதையாக செல்லும் நிலையில், இதற்கு தீர்வு காணும் முயற்சியின் ஒரு கட்டமாக இரு நாடுகளும் தமது நாட்டு எல்லைப்பலகைகளை நடுக்கடலில் நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு நாடுகளினதும் மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருப்பதற்காக, இலங்கையிலிருந்து 5ஆவது மணல் திட்டில் இலங்கை கொடியுடன் இலங்கையின் எல்லைப் பலகையும் தனுஷ்கோடியிலிருந்து 5ஆவது மணல் திட்டில் இந்தியாவின் எல்லைப் பலகையும் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையே பாரிய பிரச்சினைகள் நீடித்து வருவதோடு, பரஸ்பர கைது நடவடிக்கைகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன.

மீனவர் பிரச்சினை குறித்து பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதிலும், தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படாத நிலையில் இவ் எல்லைப்பலகை நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg