Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஸ்லான் ஷா கிண்ண ஹொக்கி போட்டியில் இங்கிலாந்து சம்பியன்

In விளையாட்டு
Published: 07:45 GMT, May 7, 2017 |
0 Comments
1222
This post was written by : Surenth
ahsan shah hockey

அஸ்லான் ஷா கிண்ண ஹொக்கி போட்டியில் இங்கிலாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் அவுஸ்ரேலியா அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.

26ஆவது அஸ்லான் ஷா கோப்பை ஹொக்கி போட்டித் தொடர் மலேசியாவின் ஈபோ நகரில் நடைபெற்றது. நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்ரேலியா 3-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

இங்கிலாந்து அணியின் இந்த வெற்றியின் மூலம் 2ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கு முன்னர் 1994ஆம் ஆண்டு சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை தோற்கடித்து, வெண்கலப்பதக்கத்தை பெற்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg