Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெனிசுவேலா ஜனாதிபதியை பதவி விலகக் கோரி பெண்கள் நூதனப் போராட்டம்

In
Updated: 09:02 GMT, May 7, 2017 | Published: 09:02 GMT, May 7, 2017 |
0 Comments
1319
This post was written by : Anojkiyan

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலா மடுரோவை பதவி விலகக் கோரி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட அந்நாட்டு பெண்கள் வெந்நிற உடைகளுடன் கைகளில் ரோஜா பூக்களை ஏந்தியவாறு நேற்று (சனிக்கிழமை) நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் பல முக்கிய நகரங்களில் நேற்று நடந்த இந்த போராட்டத்தின்போது வெனிசுலா தேசிய கீதத்தை பாடியவாறு ஊர்வலமாக சென்ற பெண்களை தடுக்க முயன்ற பாதுகாப்பு படையினருக்கு காதலின் சின்னமான ரோஜாப் பூக்களை போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் கொடுத்துள்ளனர்.

இதன்போது கடந்த ஆறுமாத காலமாக இடம்பெற்றுவரும் போராட்டங்களின் போது உயிரிழந்தவர்களுக்கு அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில் கறுப்பு மூகமுடிகளை அணிந்தவாறும் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ, சர்வாதிகாரிபோல் ஆட்சி செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சியினரும் கடந்த ஆறுமாத காலமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அரசை எதிர்த்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும். சீரழிந்து கிடக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் சிறப்பாக கட்டமைக்க வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகளை பெற வேண்டும் என்பது இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த போராட்டத்தில் இருதரப்பிலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஆனால், அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் தனது அரசை கவிழ்க்க சில தீவிரவாதிகள் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி; நிக்கோலஸ் மடுரோ குற்றம்சாட்டி வருகிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg