Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொன்சேகாவின் புதிய பதவி குறித்து தகவல் திரட்டும் இராஜதந்திரிகள்!

In இலங்கை
Updated: 13:03 GMT, May 7, 2017 | Published: 08:53 GMT, May 7, 2017 |
0 Comments
1408
This post was written by : Varshini

பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு தரப்பில் முக்கிய பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த பதவி குறித்து பன்னாட்டு இராஜதந்திரிகள் தகவல் திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதி யுத்தத்தின் போது இராணுவ தளபதியாக செயற்பட்டவர் என்ற ரீதியில், போர்க்குற்ற செயற்பாடுகளில் சரத் பொன்சேகாவும் சர்வதேசத்தால் விமர்சிக்கப்பட்டு வருபவராவார். அச் சந்தர்ப்பத்தில் இராணுவத்தில் முக்கிய பதவிகளை வகித்து வந்தவர்கள், மஹிந்த ஆட்சிக் காலத்தில் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த அரசைப் போன்று தற்போதைய அரசும் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையிலேயே சரத் பொன்சேகாவின் புதிய பதவி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, சரத் பொன்சேகாவுக்க வழங்கப்படும் பதவி குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் அறிந்து தமது நாடுகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நடவடிக்கையில் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களின்போது செயற்படுவதற்காக இராணுவத்தின் சிறப்புச் செயலணியை உருவாக்கி, அதன் அதிகாரங்களை சரத் பொன்சோகவுக்கு வழங்கவுள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg