Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாயக்கல்லி மலை பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பு

In இலங்கை
Updated: 09:37 GMT, May 7, 2017 | Published: 09:27 GMT, May 7, 2017 |
0 Comments
1544
This post was written by : Varshini

கிழக்கில் பூதாகரமாக வெடித்துள்ள இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹபரணையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற அனைத்து மாகாண முதலமைச்சர்களின் 33ஆவது வருடாந்த மாநாட்டின் போது ஜனாதிபதியை பிரத்தியேகமாக சந்தித்த கிழக்கு முதல்வர் நஸீர் அஹமட் இதுகுறித்து எடுத்துரைத்துள்ளார்.

மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டுள்ளமை மற்றும் அங்கு சிறுபான்மையினரின் காணிகளில் அத்துமீற முன்னெடுக்கப்படும் முஸ்தீபுகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதியிடம் எடுத்துரைத்த முதலமைச்சர், இச்சம்பவம் தொடர்பில் இறக்காமம் சிவில் சமூக பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்ட ஆவணங்களையும் ஜனாதிபதியிடம் கையளித்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 4784 ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேசிய முகாமைத்துவ திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அனுமதி மற்றும் அது தொடர்பான விரிவான தரவுகள் அடங்கிய ஆவணங்களை ஜனாதிபதியிடம் கையளித்ததோடு, அதற்கான நிதியை துரித கதியில் பெற்றுத் தர உத்தரவிடுமாறும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து நிதி ஆணைக்குழுவின் செயலாளரை அழைத்த ஜனாதிபதி, எதிர்வரும் வாரங்களில் கிழக்கு மாகாண சபையுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து விரைவில் நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்ததாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

my n east cm (3) my n east cm (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg