Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கஞ்சா போதைப் பொருளை சட்டபூர்வமாக்கக் கோரி தென்கிழக்கு வேல்ஸில் பேரணி

In
Published: 12:04 GMT, May 7, 2017 |
0 Comments
1745
icon_com
This post was written by : Sylviya
16

தென்கிழக்கு வேல்ஸில் கஞ்சா போதைப் பொருளை சட்டபூர்வமாக்கக் கோரி, கார்டிப் நகர மையத்தில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட குறித்த பேரணியில் சுமார் 300 பேர் வரை கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலெக்சான்ரா தோட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணி, நகர மையம் வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணியை கார்டிப் கனாபிஸ் சமூகச் சங்கம் ஒழுங்கமைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த போதைப் பொருளை சட்டபூர்வமாக்கும் விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த drug and alcohol charity Cais  அமைப்பின் தலைமை நிர்வாகி, “கஞ்சா போதைப் பொருள் மிகவும் வீரியமானது” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “நாம் நினைப்பதை விட கஞ்சா போதைப் பொருள் பன்மடங்கு சக்தி வாய்ந்தது. பொதுமக்கள் இதை ஒரு சாதாரண விடயமாகவே கருதுகின்றனர். ஆனால் உண்மையில் அது அப்படியல்ல”  என தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg