Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பங்களாதேஷில் ஐ.பி.எல். சூதாட்டம்: ஒருவர் மரணம்

In கிாிக்கட்
Updated: 11:54 GMT, May 7, 2017 | Published: 11:54 GMT, May 7, 2017 |
0 Comments
1154
This post was written by : Surenth

பங்களாதேஷில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கடந்த 2ஆம் திகதி நடத்தப்பட்ட குறித்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற ஐ.பி.எல். போட்டியின் போது இளைஞர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, சந்தோஷ் மற்றும் அவரது சக நண்பர்களும் சூதாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதன்போது, சந்தோஷ் “50 டோகா” பணம் வென்றுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பணத்தை வழங்க சந்தோஷின் நண்பர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். பின்னர், நண்பர்களுக்கும் சந்தோஷுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு இதில் சந்தோஷ் படுகாயம் அடைந்துள்ளார்.

இதன்போது, படுகாயம் அடைந்த சந்தோஷ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg