Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸ், இராணுவ வாகனங்களில் சுழலும் விளக்குகளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

In இந்தியா
Updated: 12:00 GMT, May 7, 2017 | Published: 12:00 GMT, May 7, 2017 |
0 Comments
1188
This post was written by : Ravivarman

அவசரப் பணிகள் நிமித்தமாக செல்லும் பொலிஸ், இராணுவ மற்றும் துணை இராணுவத்துறைக்கு சொந்தமான வாகனங்களில் சுழலும் விளக்குகளை பயன்படுத்த மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

எனினும், ஒரு குறிப்பிட்ட பணி நிமித்தமாக விரைவாகச் செல்ல வேண்டிய நிலையில் மட்டுமே சுழலும் சிவப்பு, நீலம் மற்றும் வெந்நிற விளக்குகளை பயன்படுத்த வேண்டும் என இதுதொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த புதிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நிலநடுக்கம், வெள்ளம், நிலச்சரிவு, புயல், சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றத்தின்போதும், மனிதர்களால் உண்டாக்கப்படும் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்கும் பணிக்காக விரைந்து செல்லும் வாகனங்களும் சுழலும் விளக்குகளை பயன்படுத்தலாம் என்றும் அந்த உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg