Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக இமானுவேல் மக்ரோங் தெரிவு!

In உலகம்
Updated: 04:46 GMT, May 8, 2017 | Published: 04:46 GMT, May 8, 2017 |
0 Comments
1761
This post was written by : Sylviya

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சோசலிச கட்சியின் வேட்பாளரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான இமானுவேல் மக்ரோங் (Emmanuel Macron) அந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸின் அரசியல் வரலாற்றில் தெரிவு செய்யப்பட்ட இளம் ஜனாதிபதி எனும் பெருமை 39 வயதான இமேனுவேலையே சாரும். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மக்ரோங் 65 தொடக்கம் 66.1 சதவீதத்திற்கு இடைப்பட்ட வாக்குகளை பெற்றார்.

மக்ரோங்குடன் போட்டியிட்ட தீவிர வலதுசாரி தேசியவாதியான மரின் லெ பென் (Marine Le Pen), 33.9 மற்றும் 35 சதவீதத்திற்கு இடைப்பட்ட வாக்குகளைப் பெற்றார்.

மக்ரோங்கின் வெற்றியைத் தொடர்ந்து, லூவ் அருங்காட்சியகத்தின் முன்றலில் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் பிரான்ஸின் தேசியக் கொடியை அசைத்தவாறு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த பரிஸின் 13ஆவது மாவட்ட துணை மேயர், “நாங்கள் எதிர்பார்த்தவாறு மக்ரோங் வெற்றி பெற்று விட்டார். மக்ரோங் 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது” என தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொதுமக்களில் ஒருவர், “மக்ரோங் வெற்றி பெற்றுள்ளமை எமக்கு மகிழ்ச்சியாய் உள்ளது. மரின் வெற்றி பெற்றிருந்தால் அவர் இங்குள்ள மக்களை விரட்டியடித்திருப்பார்” என தெரிவித்தார்.

கடந்த 1958ஆம் ஆண்டிற்கு பின்னர், இரண்டு பிரதான கட்சிகளையும் தாண்டி, வேறு ஒரு கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவேயாகும்.

தனது வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மக்ரோங், ஃபிரான்ஸ் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்திருப்பதாகவும், இது நம்பிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg