Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னாள் போராளிகளை அணிதிரட்டி வடக்கு மாகாணசபைக்கு அழுத்தம் கொடுக்க தீர்மானம்

In இலங்கை
Updated: 04:18 GMT, May 8, 2017 | Published: 04:18 GMT, May 8, 2017 |
0 Comments
1562
This post was written by : Varshini

சகல பிரதேசங்களிலும் உள்ள மக்கள் மற்றும் முன்னாள் போராளிகளை அணிதிரட்டி, மக்களின் போராட்டங்களுக்கு தீர்வுகாண கோரி, வடக்கு மாகாண சபைக்கு அழுத்தம் கொடுக்கப் போவதாக ஜனநாயக போராளிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த இரண்டு மாதங்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பூர்வீக கிராம மக்களை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சென்று சந்தித்த பின்னர், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அக் கட்சியின் அரசியல் துறை பொறுப்பாளர் கதிர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

மக்களது போராட்டங்களுக்கு இதுவரை எவ்வித தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில், போராட்டங்களை வலுப்படுத்தி உச்சகட்டத்திற்கு கொண்டுசெல்வதோடு, வடக்கு மாகாண சபைக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் வடக்கு முதல்வர் உள்ளிட்டோர் அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, காணிகளுக்காக போராடும் மக்களுக்காக மாத்திரமன்றி, காணாமல் போனோர் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் மற்றும் வடக்கு – கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களையும் வலுப்படுத்தி அவர்களுடைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என கதிர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg