Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இமானுவேல் மக்ரோங்குக்கு அவுஸ்ரேலிய பிரதமர் வாழ்த்து

In உலகம்
Updated: 05:13 GMT, May 8, 2017 | Published: 05:13 GMT, May 8, 2017 |
0 Comments
1653
This post was written by : Sylviya

பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இமானுவேல் மக்ரோங்குக்கு அவுஸ்ரேலிய பிரதமர் மல்க்கம் டர்ன்புல் (Malcolm Turnbull) இன்று (திங்கட்கிழமை) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இமானுவேல் மக்ரோங்குக்கு நான் வாழ்த்து தெரிவித்து குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்தேன். வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்து அவரிடம் இருந்து பதிலும் கிடைத்தது” என தெரிவித்தார்.

பிரான்ஸின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவுகள் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெற்றது.

அதில், 11 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்த நிலையில், 39 வயதான முன்னாள் முதலீட்டாளரான, இமானுவேலும், தீவிர வலதுசாரி தேசியவாதியான 48 வயதான மரின் லெபென்னுமே முன்னணி பெற்றனர்.

முன்னணி வகித்த இரண்டு வேடப்பாளர்களில் ஒருவரை தேர்வு செய்வதற்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவுகள் நேற்று இடம்பெற்றன.

இதில் இமானுவேல் – லெ பென் ஆகிய இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியபோதிலும், இமானுவேல் வெற்றி பெற்று பிரான்ஸ் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg