Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கெஜ்ரிவால் மீதான குற்றச்சாட்டுக்கள் வேதனையளிக்கிறது: அன்னா ஹசாரே

In இந்தியா
Updated: 06:09 GMT, May 8, 2017 | Published: 06:07 GMT, May 8, 2017 |
0 Comments
1316
This post was written by : Shailu

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் இடம் பெற்றுள்ளமையானது தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் பெற்றதாக குற்றம்சாடப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து டெல்லி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பல விமர்சனங்களை முன்வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஹசாரே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான அமைப்பில் ஒரு அங்கத்தவராக என்னுடன் கெஜ்ரிவாலும் இணைந்தார். டெல்லியில் இடம்பெற்ற பல ஊழலுக்கு எதிராக கெஜ்ரிவால் பிரசாரம் செய்தார். இதன்மூலம் நாங்கள் மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றோம்.

ஆனால் இன்று அவரே இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளாரர். இது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. எனினும் இந்த விவகாரம் குறித்து ஆழமாக ஆராய்ந்த பின்னரே விரிவான அறிக்கை வெளியிடுவேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பை ஏற்படுத்தி, ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுத்து வந்தார்.

அவருடன் இணைந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சில காலம் போராட்டங்களில் கலந்து கொண்ட நிலையில், தற்போது கெஜ்ரிவால் தனது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சத்யேந்திர ஜெயினிடம் இருந்து ரூ.2 கோடி இலஞ்சம் பெற்றதாக குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg