Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எனது கொள்கைகளை பிரதமர் மே திருடுகிறார்: நைஜல் பராஜ்

In
Updated: 07:52 GMT, May 8, 2017 | Published: 07:51 GMT, May 8, 2017 |
0 Comments
1541
This post was written by : Sylviya

பிரித்தானிய பொதுத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் தெரேசா மே தனது கொள்கைகளை திருடுவதாகவும் அனை செயற்படுத்த முயல்வதாகவும் யூகிப் கட்சியின் முன்னாள் தலைவர் நைஜல் பராஜ் தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த கருத்தை அவர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இவர் கருத்து தெரிவிக்கையில், “நான் 2013ஆம் ஆண்டில் பயன்படுத்திய கொள்கைகளையே தெரேசா மே தற்போது பொதுத் தேர்தல் விடயத்தில் பின்பற்றுகிறார். பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக்குதல், குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்தல் மற்றும் பல விடயங்கள் தொடர்பில் நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். தற்போது நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அதே விடயங்கள் தொடர்பில் பிரதமர் தெரேசா மே பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்” என தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, பிரெக்சிற்றை காரணங்காட்டி பிரித்தானிய பொதுத் தேர்தல் முடிவுகளில் ஐரோப்பிய ஒன்றியம் ஆதிக்கம் செலுத்த முனைகின்றது என கடந்த புதன்கிழமை பிரதமர் மே தெரிவித்திருந்தார்.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்த நிலைப்பாடு தொடர்பில் ஐரோப்பிய ஊடகங்கள் தவறான கருத்துக்களை வெளியிடுகின்றன எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg