Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்கள் மீது பிரச்சினைகள் வலிந்து திணிக்கப்படுகின்றன: டக்ளஸ்

In இலங்கை
Updated: 11:40 GMT, May 8, 2017 | Published: 11:38 GMT, May 8, 2017 |
0 Comments
1239
This post was written by : Varshini
Douglas_Devananda

நாட்டில் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்கின்ற நிலையில், புதிதாக பல பிரச்சினைகள் மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகின்றன என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பின் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டில் ஜனநாயக ரீதியில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக போராட்டங்களை ஒடுக்குவதற்கு விசேட ஏற்பாடுகளை முன்னெடுப்பது ஆரோக்கியமான செயற்பாடு அல்லவென்றும் அது நாட்டின் எதிர்காலத்திற்கு பாதிப்பாக அமையுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நிதி செலவின்றி கொள்கை ரீதியில் தீர்க்கப்படக்கூடிய வில்பத்து, மாயக்கல்லி, மடு, திருகோணமலை போன்ற பகுதிகளில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் மாலபே தனியார் கல்லூரி தொடர்பான பிரச்சினைகளே இன்று பாரிய பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, வடக்கு கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சினை மற்றும் காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினை என்பன மனிதாபிமான அடிப்படையில் தீர்க்கப்படவேண்டியவை என்று டகள்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குப்பைகள் தொடர்பில் உரிய கொள்கைகள் காணப்படாமை மற்றும் அதில் காணப்பட்ட இழுத்தடிப்புகளே மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்கு காரணமாக அமைந்ததென சுட்டிக்காட்டியுள்ள டக்ளஸ், தற்போது கண்டி மற்றும் பண்டாரவளை ஆகிய பகுதிகளிலுள்ள குப்பை மேடுகளும் சரிவடையும் அபாயம் காணப்படும் நிலையில், அவை குறித்து உரிய அவதானம் செலுத்தப்படாமல் உள்ளதென குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலையில் மக்கள் போராட்டங்கள் மேலெழுவது சகஜமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg