Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை சமரசமாக தீர்ப்பதே சிறந்தது: மேன்முறையீட்டு நீதிமன்றம்

In இலங்கை
Updated: 12:10 GMT, May 8, 2017 | Published: 12:08 GMT, May 8, 2017 |
0 Comments
1294
This post was written by : Varshini

பெருந்தொட்டத் தொழிலாளர்களின் சம்பள நிர்ணயத்தை பிரதானமாக கொண்டுள்ள கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினையை சமரசமாக தீர்த்துக்கொள்வதே சிறந்ததென மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

அவ்வாறு தீர்த்துக்கொள்ளப்பட முடியாதவிடத்து, கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் அடுத்துவரும் அமர்வில் தமது ஆட்சேபனைகளை பதிவுசெய்ய வேண்டுமென நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தாக்கல் செய்திருந்த ரீட் மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்குறித்த விடயங்களைக் கூறியுள்ளது.

குறித்த மனு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததென்பதால் காலம் தாழ்த்தாது சமரசத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் நான்கு மாத காலத்திற்குள் சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பில் தொழில் அமைச்சர் மற்றும் தொழில் ஆணையாளருடன் கலந்துரையாடி மனுதாரரின் மனுவில் குறிப்பிட்டுள்ளவாறு கூட்டு ஒப்பந்தத்தை தொழில் ஆணையாளர் 2016 ஒக்டோபர் 16ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டமை சட்டத்திற்கு முரணானதா என்பது பற்றிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் இது சட்டத்திற்கு முரணானதெனில் அந்த திகதியிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடனும் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுடனும் கம்பனிகளுடனும் கலந்துரையாடி இப்பிரச்சினையை இணக்கப்பாட்டின் அடிப்படையில் சமரசமாக தீர்க்க முன்வர வேண்டும் எனவும் நிதியரசர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி மேற்படி கலந்துரையாடல்கள் பற்றியும், சமரச தீர்வு எட்டப்பட முடியுமாயின் அது பற்றியும் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றும் நீதியரசர் உத்தரவிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg