Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மே 18இல் ஜனாதிபதி வடக்கிற்கு வரக் கூடாது: சிவாஜிலிங்கம்

In இலங்கை
Updated: 12:23 GMT, May 8, 2017 | Published: 12:23 GMT, May 8, 2017 |
0 Comments
1857
This post was written by : Varshini

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நினைவேந்தல் நாள் எதிர்வரும் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரி முல்லைத்தீவுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எதிர்வரும் 18ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தை ஜனாதிபதி மைத்திரி நடைமுறைபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி அன்றைய தினம் முல்லைத்தீவிற்கு வரக்கூடாதென்றும் மீறி வந்தால், மக்கள் பாரிய எதிர்ப்பினை வெளிப்படுத்துவார்கள் என்றும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேசிய வீரர்கள் தினத்தை அரசாங்கத்தால் அனுஷ்டிக்க முடியும் என்றால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை ஏன் நினைவுகூர முடியாதென்றும் சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg