Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முடிவுக்கு வந்தது மறிச்சிக்கட்டி மக்களின் போராட்டம்!

In இலங்கை
Updated: 17:23 GMT, May 8, 2017 | Published: 17:23 GMT, May 8, 2017 |
0 Comments
1187
This post was written by : Vithushagan

மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை போக்கி, பிரகடனத்தை இரத்துச் செய்ய வேண்டுமென மறிச்சிக்கட்டியில் கடந்த 44 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (திங்கட்கிழமை) தற்காலிகமாக கைவிடப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் ஏற்பட்டுள்ள தவறுகளை திருத்தும் வழிவகைகள் ஏற்பட்டுள்ளதால், போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு அமைச்சர்களான றிஸாட் பதியுதீன், பைசர் முஸ்தபா, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி மற்றும் 53 இயக்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் கவுன்சில் தலைவர்கள் ஆகியோர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டே இந்த போராட்டம் கைவிடப்பட்டது.

அமைச்சர் றிஸாட் பதியுதீனின் கோரிக்கைக்கு அமைவாக, அரசியல் பிரமுகர்களான பைசர் முஸ்தபா, அசாத்சாலி மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் களத்துக்குச் சென்று, ஜனாதிபதியுடன் முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் தாங்களும் ஒருமித்து இணைந்து ஜனாதிபதியுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் விபரங்களை வெளியிட்டனர்.

தங்களால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு விபரித்தனர்.

ஜனாதிபதியின் பணிப்புரையின்பேரில் எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளருடன் நடத்தப்படவுள்ள பேச்சுவார்த்தையில் தீர்க்கமான முடிவொன்று கிடைக்குமென்ற நம்பிக்கை வெளியிட்டு, அரசியல் முக்கியஸ்தர்களும் சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மத்தியில் உரையாற்றினர்.

இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடக்கு மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மக்கள் காங்கிரசின் செயலாளர் சுபைதீன், முஸ்லிம் கவுன்சிலின் உபதலைவர் ஹில்மி அஹமட், சிரேஸ்ட சட்டத்தரணி என்.எம்.ஸஹீட் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

unnamed (13)unnamed (15) unnamed (16)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg