Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சர் ராஜித சேனாரத்னவை பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

In இலங்கை
Updated: 08:37 GMT, May 9, 2017 | Published: 04:17 GMT, May 9, 2017 |
0 Comments
1850
This post was written by : Surenth
rajitha and maitri

அமைச்சரவை பேச்சாளராக செயற்படும், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை குறித்த பதவியில் இருந்து நீக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களுக்கும் இடையில் நேற்று (திங்கட்கிழமை) இரவு சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போதே குறித்த கோரிக்கையை அவர்கள் முன் வைத்துள்ளனர்.

அவருக்கு பதிலாக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவை நியமிக்குமாறும் அவர்கள் ஜனாதிபதியை கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் ஜோன் செனவிரத்னவிற்கு தம்மை எந்தவொரு பதவியில் இருந்தும் விலக்குமாறு கோரும் அதிகாரம் இல்லை என தெரிவித்திருந்தார்.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பீல்ட் மார்சல் சரத்பொன்சேக்காவுக்கு பாதுகாப்பு தொடர்பில் முக்கியமான ஒரு பதவி வழங்கப்படவுள்ளதாக, ராஜித் சேனாரத்ன தெரிவித்திருந்தார். இந்த கருத்து அமைச்சர் ஜோன் செனவிரத்ன நிராகரித்திருந்தார்.

இந்த நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அமைச்சர்களை அமைச்சர் ராஜித சேனாரத்ன சாடுவதாகவும் அவர்கள் இதன் போது ஜனாதிபதியிடம் எடுத்து கூறியுள்ளனர்.

இந்த சந்திப்பில் அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன, அநுர பிரியதர்ஷன யாப்பா, தயாசிறி ஜயசேகர, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg